பெரம்பலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மக்கள் தளபதி ஐயா ஜி.கே.வாசன் ஆணைக்கிணங்க, சோழமண்டல தளபதி ஐயா சுரேஷ் மூப்பனார் வழிகாட்டுதலோடு புதிய உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பணியாற்றுவதற்கு பொறுப்பிற்கான படிவத்தை பூர்த்தி செய்து வழங்கும் நிகழ்ச்சி தனியார் கூட்டரங்கில் மாவட்டத் தலைவர் சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள், வட்டாரத் தலைவர்கள் பரிந்துரையின் பேரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் புதிதாக இணைந்து கொண்ட நிர்வாகிகள் தங்களுக்கு பொறுப்பு வழங்க கோரி மாவட்டத் தலைவரிடம் படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ண ஜனார்த்தனன், நாட்டார்மங்கலம் ஜெயராமன், வட்டாரத் தலைவர்கள் மூர்த்தி, அசோகன், இராமச்சந்திரன், செல்வராஜ், நகரத் தலைவர் கார்த்திக் குமார், மாவட்ட மாணவரணி சூர்யா, மகளிர் அணி சித்ரா, கலைச்செல்வி, ஜெரினா பேகம் , மாவட்டச் செயலாளர் இருர் ரவிச்சந்திரன், பிரதீப் குமார், வரகுபாடி சின்னச்சாமி ஈச்சம்பட்டி ராஜேந்திரன் ஆகியோர்கள் கலந்து கொண்டு படிவத்தை பூர்த்தி செய்து நிகழ்வை சிறப்பித்தனர்.