தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் இருதய மாதா தேவாலயத்தில் இருதய மாதா தேர் திருவிழா நடைப் பெற்றது.
மாலை 7 மணிக்கு சிறப்பு ஜெபமாலையும் அதனைத் தொடர்ந்து வாடியூர் பங்குதந்தை அருட்பணி. லியோ ஜெரால்டு தலைமையில் ஆடம்பர திருப்பலியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
அதனை தொடர்ந்து மேரி மாதா உருவம் தாங்கிய தேரானது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த தேர் பவனியில் ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளைபங்கு தந்தை அருட்பணி. சிலுவையடிமை மற்றும் இணைப் பங்குதந்தை அருட்பணி. ஆல்டன் தலைமையில் நாட்டாமைகள், அன்பிய பொறுப்பாளர்கள் மற்றும் டான் போஸ்கோ இளையோர் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.