செய்தியாளர் ச. முருகவேல் புதுச்சேரி
திருவண்ணாமலையில் திருப்பெருந்துறை அடியார்கள் குழு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை திருவாசகம் உட்பொருள் குறித்த பேருரையை அதன் தலைவர் சிவ திரு சிவக்குமார் சிவனடியார்களுக்கு வழங்கி வருகிறார்.

அதன்படி நேற்று திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள “சரவணா மகிழ் இல்லத்தில்” திருவாசகம் உட்பொருள் குறித்த பேருரையை திருப்பெருந்துறை அடியார்கள்குழு தலைவர் சிவதிரு. சிவக்குமார்.வழங்கினார்.

முன்னதாக மாணிக்கவாச பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன ஒவ்வொரு வாரமும் நடக்கும் இந்நிகழ்ச்சியில் திரளாக சிவனடியார் தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். பக்தர்களுக்கு வாழை இலை போட்டு உணவு பரிமாறுவது தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது