கம்பம் நகரில் நகராட்சி ஆணையர் வாசுதேவன் உத்தரவுப்படி டெங்கு காய்ச்சலை தட்பவெட்ப நிலை காரணமாக ஏற்படும் நோய்களை தடுக்க கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள 33 வார்டுகளிலும் டெங்கு பணியாளர்கள் கொசு மருந்து அடிக்கும் பணிகளை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன

கம்பம் நகரம் தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய நகரமாகும் கம்பத்திலிருந்து மேற்கே 13 கிலோமீட்டர் தொலைவில் கம்பம் மெட்டு கேரளாவில் இணைக்கும் நகரமாகவும் இதே போல் தெற்கே கம்பத்திலிருந்து குமுளிக்கு 23 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் இணைக்கும் நகரமாக கம்பம் நகரம் உள்ளது கேரளாவில் பல்வேறு நோய்கள் மற்றும் குறிப்பாக தற்போது வேகமாக பரவி வரும் குரங்கம்மை நோய் போன்ற தொற்று நோய்களை தடுக்கும் விதமாக கேரளாவை ஒட்டி உள்ள மாநிலம் என்பதாலும் இங்கு வசிக்கும் பொது மக்களுக்கு பல்வேறு நோய்கள் மட்டும் இல்லாமல் குறிப்பாக காய்ச்சல் இருமல் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் அதிகமாக கம்பம் நகரில் பரவி வருகிறது
மேலும் தற்பொழுது கேரளாவில் பெய்து வரும் கனமழையால் தட்பவெட்பநிலை மாற்றத்தாலும் சீதோஷ்ண நிலை மாற்றத்தின் காரணம் ஆகவும் தற்பொழுது நமது அண்டை மாநிலமான கேரளாவில் வேகமாக பரவி வரும் குரங்கம்மமை நோய் தடுக்கும் விதமாகவும் பொது மக்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை தடுக்கும் விதமாக நகரில் உள்ள 33 வார்டுகளிலும் தெருத் தெருவாக குழுவாக சென்று வீடு வீடாக வீடு சமையலறையை தவிர்த்து கழிப்பறை படுக்கையறை போன்ற இடங்களில் வீட்டுக்குள்ளே வந்து குறிப்பாக யாரும் படுத்தியிருந்தால் அவர்களை எழுப்பச் சொல்லி கொசு மருந்து அடிப்பதால் குடியிருக்கும் மக்களுக்கு நோய் பரவாமல் தடுக்கும் விதமாக கொசு மருந்து அடிப்பதில் டெங்கு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியை நகர பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர் ரா
வாசுதேவன் அவர்களையும் சுகாதார அலுவலர் அரசகுமார் அவர்களையும் மற்றும் வீடு வீடாக கொசு மருந்து அடிக்கும் டெங்கு பணியாளர்களையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.