முதல்வர் பணிநிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் கையெழுத்து இயக்கம்:
தமிழகத்தில், 2012 முதல், 13 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும், 12,000 பேருக்கு, தி. மு. க., 2016 மற்றும் 2021ல் அளித்த தேர்தல் வாக்குறுதி படி, பணி நிரந்தரம் செய்ய வேண்டி, தமிழகம் தழுவிய கையெழுத்து இயக்கம் தருமபுரியில் தொடங்கப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியை அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
மாநில இணை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் வரவேற்புரை ஆற்றினார்.
மண்டல ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி கோரிக்கை விளக்கி பேசினார்.
மகளிரணி ஒருங்கிணைப்பாளர்கள் ரம்யா சாந்தி அதிகம் தீர்மானங்களை வாசித்தனர்.
பெரியண்ணன் அருள்ராஜா அருண்குமார் முருகன் கார்த்திகேயன் பாலாஜி கலந்து கொண்டனர்.
இறுதியில் தர்மலிங்கம் நன்றியுரை ஆற்றினார்.
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது :
10 ஆயிரம் சம்பளம் பெற்று வந்த பகுதிநேர ஆசிரியர்களிடம் திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் பணி நிரந்தரம் செய்வேன் என இன்றைய முதல்வர் ஸ்டாலின் அப்போது நேரில் வாக்குறுதி அளித்தார்.
மேலும் 20 ஆயிரம் சேர்த்து காலமுறை சம்பளத்தை முதல்வர் வழங்குவார் என ஒவ்வொரு பட்ஜெட்டையும் எதிர்பார்த்தோம்.
மூன்று ஆண்டாக பணி நிரந்தரம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நடப்பாண்டு 2024 ஜனவரி முதல் 2,500 சம்பளம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இது மிகவும் காலம் தாழ்த்தி வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய விலைவாசி உயர்வில் இந்த 12,500 சம்பளம் குடும்பம் நடத்த போதாது.
இந்த தொகுப்பூதிய முறையை கைவிட்டு காலமுறை சம்பளம் வழங்கினால் மட்டுமே வாழ்வாதாரம் கிடைக்கும்.
அதுபோல் 13 ஆண்டுகளாக செய்து வருகின்ற தற்காலிக வேலையை முறைப்படுத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
முன்பு கலைஞர், இப்போது முதல்வர் ஸ்டாலினும் தேர்தலின்போது பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை 12 ஆயிரம் குடும்பங்கள் நலன் காக்க நிறைவேற்ற வேண்டும்.
எஸ்.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
செல் : 9487257203