கோவையில் சி.என்.ஏ. 26 வது எடிஷன் விருதுகள் வழங்கும் விழா
கல்வி,மருத்துவம்,இளம் தொழில் முனைவோர் என பல்வேறு துறை சார்ந்தோர் விருதுகள் வழங்கி கவுரவிப்பு
கோவை இடையர்பாளையம் பி அண்ட் டி காலனி பகுதியில் செயல் பட்டு வரும் கோவை நாட்டிய அகாடமி தொடர்ந்து பல ஆண்டுகளாக பல்வேறு துறை சார்ந்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக சி.என்.ஏ. விருதுகள் வழங்கி வருகின்றனர்..
இந்நிலையில் கோவை நாட்டிய அகாடமியின் புதிய அங்கமாக சி.என்.ஏ.ஐ.ஏ.எஸ்.அகாடமி துவங்கப்பட்டு சிவில் சர்வீஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்தி வருகின்றனர்…
இந்த நிலையில் சி.என்.ஏ. 26 வது எடிஷன் விருதுகள் வழங்கும் விழா கோவை ஒசூர் சாலையில் உள்ள ஆருத்ரா அரங்கில் நடைபெற்றது..
கோவை நாட்டிய அகாடமியின் நிறுவனர் டாக்டர் ஆலியா நிஷா சி.என்.ஏ.ஐ.ஏ.எஸ்.அகாடமியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவக் குமரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில்,சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் டாக்டர் கவிதாசன் கலந்து கொண்டார்..
விழாவில் கல்வி,மருத்துவம்,இளம் தொழில் முனைவோர்,சமூக சேவை,
விளையாட்டு,கலைத்திறன் என பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது..
தொடர்ந்து மாணவ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது..
இந்நிகழ்ச்சியில் சி.என்.ஏ. ஐ.ஏ.எஸ்.அகாடமியின் குழுவினர்
பலர் கலந்து கொண்டனர்..