திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த
மேலக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிக்கூடத்தான் வலசு பகுதியில் பட்டியலின மக்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று சென்ட் நிலம் மற்றும் பட்டாக்கள்
65 நபர்களுக்கு வழங்கப்பட்டன.

தொடர்ந்து அப்பகுதியில் 30க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

மீதமுள்ள நபர்கள்சிறு சாலைகள் அமைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அமரபூண்டி ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் தலைமையில் சிலபேர் பட்டியலின மக்களை சாலை போட விடாமல் தடுத்து வருகின்றனர்.

மேலும் பட்டியலின மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தில் சாலைகளை அகற்றி ஊராட்சி நிர்வாகம் சார்பாக மாற்று நபர்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து பட்டா வழங்கிய பட்டியலின மக்களுக்கு இடத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் துரை.முத்தரசு தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர் .

மேலும் இந்நிகழ்வில் தளபதி என்ற வள்ளி குறல்நெறியன், மாரிமுத்து, சந்திரகலா, தெரசம்மாள், காட்டம்மாள்,வளர்த்தாய், நாகலட்சுமி பொன்னுச்சாமி பாப்பாத்தி,முனீஸ்வரி உள்ளிட்ட பயனாளிகள் கலந்து கொண்டு வட்டாட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர்.

தொடர்ந்து அதிகார தோரணையில் பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *