சபரிநகரில் பகுதிநேர ரேசன்கடை அமைக்க வேண்டும்–பொ.சிவபத்மநாதன் கோரிக்கை!!
தென்காசி மாவட்டம், கடையம் பெரும்பத்து ஊராட்சி சபரிநகரில் புதிய பகுதி நேர ரேசன் கடை அமைத்திட வேண்டும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சரிடம் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை, முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், சந்தித்து கடையம் ஊராட்சி ஒன்றியம், கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கடையம் ஊராட்சி ஒன்றியம், கடையம் பெரும்பத்து ஊராட்சி பகுதியில் வசிக்கும் பொது மக்கள் ரேசன் பொருட்களை வாங்குவதற்காக ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள மேட்டூர் மற்றும் 2 கி.மீ. தொலைவில் உள்ள வெய்க்காலிப்பட்டிக்கு சென்று வாங்கி வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேற்படி இரண்டு கடைகளும் கூட் டுறவு சங்கத்தின் மூலம் இயங்கக்கூடிய கடைகள் ஆகும்
மேட்டூர் கடையில் 592 குடும்ப அட்டைகள் உள்ளது அதில் 135 கார்டுகள் சபரிநகர் பகுதியை சேர்ந்ததாகும்.
இக்கடையில் இருந்து கானாவூர் மற்றும் மாதாபுரத்திற்கு பகுதி நேர கடைகள் பிரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் தாய்க்கடையிலிருந்து சபரி நகர் கார்டுகள் 135 ஐ பிரித்தால் தாய் கடையில் 500 காடுகளுக்கு குறைவாக வந்து விடுகிறது மேலும் அந்த கடையில் இருந்து இரண்டு கடைகள் ஏற்கனவே பகுதி நேர கடை பிரிக்கப்பட்டுள்ளது.
அதே போல் சபரி நகர் மக்கள் சுமார் 76 அட்டை தாரர்கள் வெய்க்காலிபட்டி கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகிறார்கள் அந்த கடையில் மொத்தம் 996 குடும்ப அட்டைகள் உள்ளது அந்த கடையிலிருந்து பகுதி நேர கடை எதுவும் பிரிக்கப்படவில்லை
எனவே மேட்டூர் கடை யிலிருந்து சுமார் 90 கார்டு களை வெய்க்காலிபட்டி கடைக்கு மாற்றி அங்கு இருந்து ஒரு பகுதி நேர கடையை சபரி நகருக்கு மாற்றி வழங்கினால் அந் தப் பகுதி மக்கள் இரண்டு ஊர்களுக்கு அலைந்து பொருட்கள் வாங்குவது தவிர்க்கப்பட்டு, சொந்த பகுதியில்ரேஷன்பொருட் கள் வாங்குவதற்கு ஏது வாக இருக்கும்
மேலும் பொதுமக்கள் சார்பில் வாடகை இன்றி கடைகட்டிடமும் பொருட்கள் வழங்குவதற்கான தளவாட சாமான்களும் வாங்கி கொடுப்ப தற்கு தயாராக இருக்கிறார்கள். எனவே சபரிநகரில் புதிய பகுதி நேர ரேசன் கடை அமைத் திட நடவடிக்கை எடுக் கும் படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், பொதுக் குழு உறுப்பினர் சாமி துரை, மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் இட்லிசெல்வன், மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்ய ராஜ், ஆலங்குளம் பேரூ ராட்சி மன்றதலைவர்சுதா மோகன்லால், ஆலங்குளம் யூனியன் துணை சேர்மன் செல்வக்கொடி ராஜாமணி, முன்னாள் குருக்கள்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வனராஜ், ராஜ், ஓட்டு னர் செல்வகுமார், முரு கன், முத்து ஆகியோர் உடனிருந்தனர்.