தென்காசி ரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் இயந்திரம் பழுது – ரயில் பயணிகள் அவதி–ரயில் பயணிகள் நலசங்கத் தலைவர் கோரிக்கை
தென்காசி ரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும இயந்திரம் பழுதாகி உள்ளதால் ரயில் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என தென்காசி ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் என் வெங்கடேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் தென்காசி ரயில் நிலையத்தில் நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுவதால் அதில் ஏராளமான பயணிகள் பயணம்
செய்து வருகின்றனர். இதன் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு அதிக அளவிலான வருமானம் வந்து கொண்டிருக்கிறது.
தென்காசி ரயில் நிலையத்தில் பயணம் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஒரே ஒரு டிக்கெட் கவுண்டர் மட்டுமே இருந்து வந்தது.
பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு குறித்த நேரத்தில் டிக்கெட் வழங்க முடியவில்லை இதனால் பல்வேறு புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் தென்காசி ரயில் நிலையத்தில் இரண்டு தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் திறக்கப்பட்டது.. இதனால் தென்காசி ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் ஓரளவு சிரமமின்றி டிக்கெட் எடுத்து பயணம் செய்து வந்தனர்
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென ஒரு இயந்திரம் பழுதானது. இதனால் ரயில் பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்.
இந் நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு டிக்கெட் வழங்கும் இயந்திரமும் பழுதாகி வட்டது. இதனால் ரயில் பயணிகள் ரயில் நிலையத்தில் உள்ள ஒரேஒரு டிக்கெட் கவுண்டரில் மட்டுமே டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து வருகின்றனர். இதனால் பயணிகள் ரயில் வருவதற்கு முன்பாக டிக்கெட் எடுக்க முடியாமல் ஒவ்வொரு முறையும் ரயிலை தவற விட்டு விடுகின்றனர். காலை முதல் மாலை வரை சுமார் நூற்றுக் கணக்கான பயணிகள் ரயில் வருவதற்கு முன்பாகவே நீண்ட வரிசையில் நின்றும். டிக்கெட் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்குள் ரயில் தென்காசியை ரயில் நிலையத்தை கடந்து சென்று விடுகிறது.
இதனால் ரயில் பயணிகளின் பயணம் தடைபடுகிறது.இதனால் ரயில் பயணிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுவதோடு, அதன் பிறகு தங்களது பயணத்தை தொடர வேறு வழி இல்லாமல் அரசு பேருந்து அல்லது தனியார் கார்களில் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் நேர விரையமும் கூடுதல் செலவும் ஏற்படுவதோடு ரயில்வே நிர்வாகத்திற்கு வருமானமும் வெகுவாக குறைந்து வருகிறது
.எனவே உடனடியாக தென்காசி ரயில் நிலைய அலுவலர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் இந்த பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக இரண்டு தானியங்கி இயந்திரங்களையும் பழுதுநீக்கி இரண்டு இயந்திரங்களும் செயல்படும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அல்லது தென்காசி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க மேலும் இரண்டு டிக்கெட் கவுண்டர்களை திறக்க வேண்டும். என்று தென்காசி ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் என்.வெங்கடேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.