மதுரையில் பாரா பாட்மின்டன் விளையாட்டு வீரர் தம்பதியை வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…..
மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
பாரா பாட்மின்டன் போட்டிகளில் தொடர்ந்து சாதித்து வரும் விளையாட்டு வீரர் மனோஜ், நம் திராவிட மாடல் அரசில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப்பணி பெற்று பலருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.
அண்மையில் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், மதுரை அச்சம்பத்து பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று மனோஜ் மற்றும் அவரது வாழ்விணையர் லோகப்ரியாவை நேரில் வாழ்த்தினார்.
இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள மனோஜ் – லோகப்ரியா இருவரும், கலைஞரும் – தமிழும் போல, முதலமைச்சரும் – உழைப்பும் போல வாழ்கவென வாழ்த்தினார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மனோஜ் லோகப்பிரியா தம்பதிகளை வாழ்த்தினர்.