விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த
32 சிலைகள் தனித்தனி வாகனங்களில் நீர்நிலைகளில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது முன்னதாக
பஞ்சு மார்க்கெட் நேரு சிலை முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணியின் துறவியர் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சரவணன் கார்த்திக் சிறப்புரையாற்றினார்
மேலும் சுகந்தம் ராமகிருஷ்ணன், சூரிய நாராயணன், என்.ஏ. ராமச்சந்திர ராஜா, என்.எஸ். ஜெகநாத ராஜா உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் மேற்கு மாவட்ட செயலாளர் என் எஸ் ஜெகநாத ராஜா கொடியை அசைத்து ஊர்வலத்தை துவங்கி வைத்தார்.
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கைகளில் வைத்திருந்த தாம்பாளங்களில் விநாயகர் சிலைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
தொடர்ந்து ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்த விநாயகர் சிலைகள் சப்பரங்களில் கொண்டுவரப்பட்டு ஊர்வலத்தில் பங்கேற்றன. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் பங்கேற்ற இந்த ஊர்வலத்திற்கு ராஜபாளையம் டி எஸ் பி. ப்ரீத்தி தலைமையில் காவல் துறையினர், மற்றும் ஊர்க்காவல் படையினர், சிறப்பு அதிரடி படையினர் பலத்த பாதுகாப்புடன் நடந்த ஊர்வலம் பஞ்சு மார்க்கெட் நேரு சிலையில் இருந்து புறப்பட்டு பழைய பேருந்து நிலையம், தெற்கு காவல் நிலையம், வழியாக அம்பலப்புளி பஜார் சங்கரன்கோவில் சாலை.வழியாக சென்று. கண்மாயில் கரைக்கப்பட்டது.