பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே மெலட்டூர் வெட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடும் பணி தீவிரம்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேட்டூர் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் மதிமகன் விக்னேஷ் வயது 28 இவர் மெலட்டூர் பகுதியில் வெட்டாட்டாற்றில் குளிக்க சென்ற போது நீர் வரத்து அதிகமாக இருந்ததால் எதிர்பாராத விதமாக அவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார் தகவல் அறிந்த பாபநாசம் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முருகானந்தம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மெலட்டூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.