தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் இந்து முன்னணி சார்பில் சுவாமி சன்னதி, அண்ணா நகர், மாதாங்கோவில் தெரு, முத்து ராமலிங்கபுரம் தெரு, லெட்சுமியாபுரம் தெருக்கள் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் அமைக்கப்பட்ட 23 விநாயகர் சிலைகளும், சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள 6 சிலைகளும் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பிரதிஷ்டை செய்யப்பட்ட 29 சிலைகளும் நேற்று மதியம் இரண்டு மணி முதல் ஒவ்வொன்றாக சங்கர நாராயணசாமி கோவில் முன்பு கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஓம் ஸ்ரீ தர்ம சாஸ்தா பக்த சேவை அறக்கட்டளை தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
அகில பாரத துறவியர் பேரவை இணை செயலாளர் சுவாமி ராகவானந்தா ஜி ஆசியுரை வழங்கினார்.இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் சிறப்புரை யாற்றினார் சாரதிராம் அறக்கட்டளை நிறுவனர் ராமநாதன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஊர்வலம் சுவாமி சன்னதியில் இருந்து தொடங்கி மெயின் ரோடு, ராஜ பாளையம் சாலை, திருவள்ளுவர் சாலை, கீதாலயா தியேட்டர் ரோடு, திருவேங்கடம் சாலை, புதுமனை தெரு, மாதா கோவில் தெரு வழியாக மெயின் ரோடு, ரதவீதி வழியாக மீண்டும் சுவாமி சன்னதியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் இந்து முன்னணி நகர தலைவர் பாடலிங்கம், பொது செயலாளர் விஜய பாலாஜி, பொருளாளர் சந்திரன், நகர செயலாளர்கள் திருமலை குமார் மாரிமுத்து, பழனிக்குமார், நகர துணை தலைவர்கள் திருமலை குமார், பாலகிருஷ்ணன், பாலமுருகன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் வன்னியராஜ், பாஜக மாவட்ட செயலாளர் கள் சுப்பிரமணியன், ராஜலட்சுமி சுந்தரராஜ், மாவட்ட கல்வியாளர் பிரிவு செயலாளர் வெங்கடேஸ்வர பெருமாள், நகர தலைவர் கணேசன், பொதுச் செயலாளர் கோமதிநாயகம், நகரச் செயலாளர்கள் சுப்பிரமணியன், அருண் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நெல்லை சரக டி ஐ.ஜி பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் மாவட்ட கூடுதல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ், காவல் துணை கண்காணிப்பாளர்கள் அறிவழகன் (சங்கரன்கோவில்) வெங்கடேஷ் (புளியங்குடி) பர்னபாஸ ஜெயபால் (ஆலங்குளம்) மற்றும் 15 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 400 போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.