திருச்சிற்றம்பலம் கிராமத்தில் சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து செயல் விளக்கம் ;-
தென்காசி அருகே திருச்சிற்றம்பலம் கிராமத்தில் அங்கன்வாடியில்
ஶ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் கல்லூரி வேளாண்மைதுறை மாணவிகள் சிறுதானியங்களில் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
ஶ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரியின் இறுதி ஆண்டு இளங்கலை வேளாண் துறை மாணவிகள் கிளாடிஸ் வெரோனிகா சுவாதி ஶ்ரீலட்சுமி லெனா எ அகஸ்டின் ஆதித்யா கணேசன் ஶ்ரீ சன்மா கயல்விழி மற்றும் லட்சுமி தேவி (எ) பாரதி வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கிராம தங்கல் திட்டத்தில் தென்காசி பகுதியில் தங்கி விவசாயி களை நேரில் சந்தித்து பல்வேறு ஆலோசனை களையும் செயல்முறை விளக்கங்களை அளித்து வருகின்றனர். இம்மாணவிகள் தென்காசி வேளாண் உதவி இயக்குநர் ஜோதி பாசு
பாட ஆசிரியர் முனைவர் ஜெயந்தி மற்றும் குழு ஆலோசகரான முனைவர் வி விஜய் பிரபா ஆகியோரின் அறிவுரையின் படி தென்காசி தாலுகா திருச்சிற்றம்பலம் கிராமத்தின் அங்கன்வாடியில் குழந்தைகள் பெற்றோர்கள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம மக்களுக்கு ராகி லட்டு அளித்து சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து சொல் விளக்கம் அளித்தனர்
இவ்வியக்கம் உதவி வேளாண்மை அலுவலர் பரமசிவம் முன்னிலையில் நடைபெற்றது
இச்சிறுதானியங்கள் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
ஆரோக்கியமான செரிமானத்தை ஆதரிக்கிறது போன்ற நன்மைகளைக் குறித்து விளக்கியதின் மூலம் அனைவரும் பயனடைந்தனர்.