V. சீராளன் செய்தியாளர் பண்ருட்டி
புதுச்சேரியில் பேராசிரியர் ம.ரா. பூபதி அறக்கட்டளையின் நான்காவது ஆண்டு விழா நடைபெற்றது.
புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பேராசிரியர் ம.ரா பூபதி அறக்கட்டளை இணைந்து நடத்திய இலக்கண மாமேதை பேராசிரியர் ம.ரா. பூபதி அறக்கட்டளையின் நான்காவது ஆண்டு விழா ஆராய்ச்சி மையக் கருத்தரங்கு கூடத்தில் நிறுவனத் தலைவர் கலை மாமணி முனைவர் நெய்தல் நாடன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
முனைவர் பேராசிரியர் ம.ஏ. கிருஷ்ணகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். முனைவர் செல்வராஜ் தொடக்க உரை நிகழ்த்த வேணு செட்டியார் பிரான்சிஸ் பேராசிரியர் இரா கோவலன் சிவத்தொண்டர் தங்க.ராசகோபால் தலைமை ஆசிரியர் கோ. கார்த்திகேயன் விரிவுரையாளர் இரா. லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் முனைவர் நா. இளங்கோ உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி , பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் மேலாண்மைச் செயலாளர் கவிஞர் தங்கவேல் வாழ்த்துரை வழங்கினார் .
புதுவை தமிழ் வளர்ச்சி சீரகம் தனி அலுவலர் முனைவர் வாசுகி ராமானுஜம் பாராட்டுரை நிகழ்த்தினார் விழாவில் புதுவை மாநில பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு.செல்வகணபதி அவர்கள் இலக்கணச் செம்மல் ம.ரா பூபதி விருதை குடந்தை கவிமாமணி பாலு கோவிந்தராஜன் அவர்களுக்கும் பண்ருட்டி தமிழ் சங்கத் தலைவர் மற்றும் அனைத்துலகப் பொங்குதமைச் சங்கத் தலைவர் பாவலர் சுந்தர பழனியப்பன் அவர்களுக்கும் விருது மற்றும் பொற்கிழி வழங்கி சிறப்பு செய்தார்கள்.
நிகழ்ச்சியை விரிவுரையாளர் சிவராமன் ஒருங்கிணைப்பு செய்தார் விழாவில் புதுவை மாநிலத்தில் பல்வேறு பள்ளி பத்தாம் , பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவச் செல்வங்களுக்கு பரிசு வழங்கப்பட்டது விரிவுரையாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்.