மாதவரத்தில் அதிமுக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி-முன்னாள் அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
செங்குன்றம் செய்தியாளர்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அதிமுக வின் , சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் திருவெற்றியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன், திருவள்ளூர் மாவட்டம் அவைத்தலைவர் பி டி சி ராஜேந்திரன், அஜாக்ஸ் பரமசிவம், பகுதி செயலாளர் வேலாயுதம், கண்ணதாசன் ,வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை செயலாளர் தமிழரசன் , திருவெற்றியூர் மேற்கு பகுதி அவைத் தலைவர் சாரதி பார்த்திபன், மகளிர் அணியினர் உள்ளிட்ட அதிமுக நிர்வாக பலர் கலந்து கொண்டனர் . இதில் ஏராளமான உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.