அரியலூர், செப். 13: அரியலூரிலுள்ள அதிமுக மாவட்ட ஆலுவலகத்தில், கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்து, பேரறிஞர் அண்ணா பிறந்த பிறந்த நாளை அனைத்து கிளைகளிலும் சிறப்பாக கொண்டப்பட வேண்டும். இனி வரும் தேர்தல்களில், திமுக ஆட்சியின் மக்கள் விரோத திட்டங்கள் குறித்து மக்களிடையே கொண்டுச் செல்ல வேண்டும். கருத்துவேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையாக இருந்து தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம், மாவட்ட பொருளாளர் அன்பழகன், முன்னாள் முன்னாள் மாவட்டச் செயலர் இளவழகன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் செந்தமிழ்ச்செல்வி, கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் செல்வராஜ், பாலு(எ)பாலசுப்பிரமணியன், மாவட்ட அம்மா பேரவைச் இணைச் செயலர் நா.பிரேம்குமார்,அண்ணா தொழிற் சங்க மாவட்டச் செயலர் பாஸ்கர், மாவட்ட மகளிரணிச் செயலர் ஜீவாஅரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.