தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், செ- 14. தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் இறைவன் தலைமையில் நடைபெற்றது.
மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்.எல்.ஏ துரை. சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில். மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, தஞ்சை மாநகர மேயரும் மாநகர செயலாளருமான சண்.ராமநாதன், மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளரும் துணை மேயருமான அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் மணிமாறன், புண்ணியமூர்த்தி கனகவல்லி பாலாஜி, மற்றும் ஒன்றிய தொகுதி பேரூர் கழக செயலாளர்கள் மாவட்ட குழு தலைவர்கள் ஒன்றிய குழு தலைவர்கள் பேரூராட்சி குழு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.கழகத்தின் பவள விழா ஆண்டில் முதல் முறையாக மு.க.ஸ்டாலின் விருதினை அறிவித்து கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சருமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கத்திற்க்கு விருதினை அறிவித்த தி.மு. கழகத்தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மாநில இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றியினைத் தெரிவித்தும்,
தி.மு.கழகத்தின் பவள விழா ஆண்டில் தந்தை பெரியாரின் கொள்கைகளையும், பேரறிஞர் அண்ணாவின் இலட்சியங்களையும், முத்தமிழறிஞர் கலைஞர் தந்த முழக்கங்களையும் கழகத்தலைவரின் வழிகாட்டலில் வலிமையோடு உயர்த்தி பிடித்திட கழகத்தின் கருப்பு சிவப்பு இருவண்ணக் கொடியினை வீதிகள் தோறும், கழகத்தினர் இல்லங்கள் தோறும் ஏற்றி பட்டொளி வீசி பறந்திட செய்ய வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.