செய்தியாளர் வெங்கடேசன்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கம் முதல் நிலை பேரூராட்சி 6வது வார்டு பகுதியில் நேற்று 15 /9 /2024 அப்பகுதியில் உள்ள கற்பக விநாயகர் ஆலய வளாகத்தில் வார்டு குழு கூட்டம் வார்டு உறுப்பினர் என். ஆர். சீனிவாசன் ஏற்பாட்டில் கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்திற்கு பனப்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து 6வது வார்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தில் அப்பகுதி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களுக்கு தேவையான கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.
கோரிக்கையில் பின்வருமாறு :
அங்கன்வாடி மையம் கழிவுநீர் வடிகால் மையம் பெருமாள் கோவில் பின்புறம் உள்ள முள் புதர்கள் அகற்றவும் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்து மருந்தடித்து கொசுக்கள் தொல்லை நீக்கவும் தெருவிளக்கு போன்ற கோரிக்கைகளை அப்பகுதி மக்கள் வார்டு உறுப்பினர் என்ஆர்.சீனிவாசன் எடுத்துரைத்தனர் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை பேரூராட்சி மன்ற தலைவர்கவிதா சீனிவாசனிடம்ஒப்படைத்தார்.
மனுக்களை பெற்றுக் கொண்டு பகுதியில் மக்கள் விடுதுள்ள கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக மன்ற தலைவர் கவிதா சீனிவாசன் உறுதி அளித்துள்ளார்
பனப்பாக்கம்.
பேரூராட்சிகுட்பட்ட அண்ணாநகர் மற்றும் பேரூராட்சியின் மற்ற பகுதிகளில் தேங்கும் கழிவுநீரினை சுத்தம் செய்ய சர்வே எண். 217/ல் குச்சி பனந்தோப்பு பகுதியில் 0.810 ஹெக்டா பரப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவில் நிலமாற்றம் செய்து இடம் கையகப்படுத்தப்பட்டு ரூ.620.00 இலட்சத்தில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசிற்கு கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை 6வது வார்டு மக்களுக்கு கூட்டத்தில் தெரிவித்தார்.