திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் ஒன்றிய மற்றும் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன் தலைமையில், கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்கமங்கலம் கோ.தட்சிணாமூர்த்தி, பேரூர் செயலாளர் பா. சிவனேசன் ஆகியோர் முன்னிலையில் திமுக நிர்வாகிகள் பெரிய பள்ளிவாசல் பகுதியில் இருந்து கடைவீதி, காளியம்மன் கோவில், கும்பகோணம் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள், அவைத் தலைவர் சோம. மாணிக்கவாசகம்,பொருளாளர் புருஷோத்தமன், பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க. தனித் தமிழ்மாறன்,மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய பிரதிநிதிகள் ஆசிரியர் சிவ.செல்லையன், கவுதம ராஜன், சிங்கு தெரு எஸ்.ஆர்.ராஜேஷ் வி.சி.ராஜேந்திரன் ஒன்றிய குழு உறுப்பினர்கள்,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பல்வேறு அணியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வலங்கை மான் பேரூராட்சி பகுதி,ஆவூர், நல்லூர், இனாம் கிளியூர், சந்திரசேகரபுரம் உள்ளிட்ட மேற்கு ஒன்றிய பகுதிகளிலும், கீழ விடையல்,மேல விடையல்,நரசிங்கமங்கலம், ஆலங்குடி, அரித்து வார மங்கலம் உள்ளிட்ட கிழக்கு ஒன்றிய பகுதிகளிலும் கட்சிக் கொடிகள் ஏற்றப்பட்டும், மரக்கன்றுகள் வழங்கியும், நடப்பட்டும் இனிப்புகள் வழங்கப்பட்டன.