பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் முதல் கதிரிபுரம் கிராமம் வரை தார்சாலை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர் இந்த கோரிக்கையை ஏற்று பிரதம மந்திரி கிராமபுற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடியே 61 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்க பூமி பூஜை போடும் நிகழ்வு பாப்பிரெட்டிப்பட்டி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தருமபுரி எம்பி மணி , முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு இந்த சாலை பணியினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.