க.தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
ராஜி கவுண்டர் நகர் பகுதியில் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை அடுத்த ராஜிகவுண்டர் நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆலய நூதன அஷ்டபந்தனமாக கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.
மேலும் மங்கல இசை, விக்னேஸ்வரபூஜை, கணபதிஹோமம், மகாலட்சுமிஹாமம் நவகிரகஹோமம், காலயாகபூஜைகள், தம்பதிகள்சங்கல்பம மகாபூரனஹுதி, தாய்வீட்டுசீர் கொண்டு வருதல் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று கோபுரத்தின் மீது உள்ள கோபுரகலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் திருப்பணி குழு நிர்வாகிகள், விழா கமிட்டினர், ஊர் பொதுமக்கள் மற்றும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி முழக்கத்துடன் சாமிதரிசனம் செய்தனர்.
மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.