செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம்
99 காபி குழுமத்தின் வளாகத்தில் பாத நிவாரணா பாத அழுத்த சிகிச்சை மைய துவக்க விழா
நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் அருகே அண்ணாநகர் பகுதியில் செயல்பட்டு வரும் 99 கீலோ மீட்டர் காபி வளாகத்தில் நேற்று காலை பாத அழுத்த சிகிச்சை
துவக்க விழா நடைபெற்றது.
மலேசியா நாட்டில் பாத அழுத்த சிகிச்சை முதல் முதலில் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவில்
சென்னை பகுதியில் உள்ள பார்வையற்றவர்களுக்கு முக்கியத்துவம் தந்து அவர்களுக்கு பாத நிவாரண மையம் மூலம் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு
வருகிறது. மேலும் அதன் சிகிச்சை பயன்கள் மன அழுத்தம் மற்றும் கவலையை குறைக்கிறது,
துாக்கத்தை மேம்படுத்தி நல்ல மனநிலையை அளிக்கிறது,
உடல் வலியைப் போக்குகிறது,செரிமானத்தை மேம்படுத்துகிறது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது,
தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு நல்ல நிவாரணம் தருகிறது,உடலின் உள்உறுப்புகளுடன் தொடர்புடைய புள்ளிகளுக்கு பாத அழுத்த சிகிச்சை கொடுப்பதன்மூலம் இரத்த ஓட்டம் சீராகி நலன் பயக்கிறது.
உள்ளிட்ட சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக அச்சிறுப்பாக்கம் பகுதியில் உள்ள அண்ணாநகர் 99காபி குழும வளாகத்தில் பாத நிவாரண மையம் 99 குழுமத்தில் இயக்குனர் மனோசாலமன் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.
இவ்விழாவில் திரைப்பட இயக்குனர் அழகியல் வித்தகர் என்.லிங்குசாமி கவிஞர் எழுத்தாளர் பாடலாசிரியர் பாவலர் அறிவுமதி,தலைவர் எக்ஸ்னோரா சர்வதேச அமைப்பு செந்தூர்பாரி,எழுத்தாளர் இயக்குனர் திரைக்கதை ஆய்வாளர் அஜயன்பாலா,ஃபஸ்ட் வேர்ல்ட் கம்யூனிட்டி நிறுவனர் டாக்டர் சி.கே.அசோக் குமார்,
பாத நிவாரணா உரிமையாளர் அம்பிகாராஜ்,இயக்குனர் சரன், நடிகர் அபிஷேக்,உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்
கலந்து கொண்டனர்.
மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரும்
பாத நிவாரணா அழுத்த சிகிச்சை பெற்று தொடங்கிவைத்தனர்.
குறிப்பாக பாத நிவாரணா 1000க்கும் மேற்பட்ட
பார்வையற்றவர்களுக்கு வேலைவாப்பு வாங்கி தருவது
நோக்கம் என தெரிவித்தனர்.