மறைந்த திராவிடர் கழகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி அரியலூர் செட்டி ஏரிக்கரையிலுள்ள அவரது சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் மாவட்டச் செயலர் அங்கனூர் சிவா தலைமையில் தொகுதிச் செயலர் அரியலூர் மதி(எ)மருதவாணன், செய்தி மக்கள் தொடர்பாளர் சி.சுதாகர், நிர்வாகிகள் தனக்கொடி, ம.கருப்புசாமி உள்ளிட்டோர் முன்னிலையில் பெரியார் சிலைககு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.