விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் அரசு விதைப் பண்ணையில் ஸ்டாமின் இயக்குனர் முனைவர் சங்கரலிங்கம், மற்றும் வேளாண்மை இணை இயக்குனர் விஜயா, மாநில திட்ட துணை இயக்குனர் முத்துலட்சுமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தேவதானம் அரசு விதைப்பண்ணையில் வேளாண் காடுகள் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் சிறிய நாற்றங்கால் அமைத்ததை மற்றும் தேவதானம் கிராமத்தில் முதலமைச்சரின் மண்னுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தக்கை பூண்டு விதைத்த வயலினை ஆய்வு மேற்கொண்டனர்.
ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைச்சாமி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் உடன் இருந்தனர்.