பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு.ஆடுதுறை ஊராட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓம் சக்தி ஆலய வழிபாட்டு தளம் நடத்தி வந்த ஓம் சக்தி பக்தர்கள் வழிபாட்டுத்தளத்தை புதுப்பித்து ஓம் சக்தி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தினர்.
இந்த ஓம் சக்தி வழிபாட்டு தளத்திலிருந்து ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓம் சக்தி அம்மனிடம் வேண்டுதல் வைத்து மாலையிட்டு இவ்வழிபாடு தளத்தில் வழிபாடு செய்து மேல்மருவத்தூர் ஓம் சக்தி ஆலயத்திற்கு சென்று வருகின்றனர்.
இந்த மாக கும்பாபிஷேகத்தில் முக்கியஸ்தர்கள்,ஊர் பொது மக்கள் பலர் கலந்துகொண்டு ஓம் சக்தி அம்மாவின் அருளை பெற்று சென்றனர்.