கோவையில் துவங்கியது சர்வதேச அளவிலான
(Tai Chi) டாய்- சி மாநாடு
பிரபல டாய் சி ஆசிரியர் மருத்துவர் பால் லாம் பங்கேற்பு..
மனம், உடல் ஆரோக்கியம்,நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்டவை மேம்படுவதற்கு சிறந்த பயிற்சியாக உலக அளவில் டாய் சி கலை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தற்காப்பு கலைகளில் ஒரு வகையான டாய் சி கலையை தற்போது பலரும் பயிற்சி பெற்று வருகின்றனர்…
இந்நிலையில் மனித வாழ்விற்கு இந்த கலையின் பயன்பாடுகள்,முறையான பயிற்சிகள்,டாய் சி குறித்த முழுமையான தகவல்களை வழங்கும் விதமாக கோவையில் நித்திய குருகுலா ஒருங்கிணைப்பில் சர்வதேச அளவிலான டாய் சி மாநாடு துவங்கியது…
செப்டம்பர் 19 ந்தேதி துவங்கி நடைபெற உள்ள இதில்,உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பலர் கலந்து கொண்டனர்..
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோயமுத்தூர் கிளப்பில் நான்கு நாட்கள் நடைபெற உள்ள மாநாட்டின் முதல் நாள் துவக்க விழா கிளப் அரங்கில் நடைபெற்றது..
முன்னதாக அனைவரையும் நித்திய குருகுலா மன நல ஆலோசணை மையம் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சசி சந்தி்ரன் அனைவரையும் வரவேற்று பேசினார்..
கவுரவ அழைப்பாளர்கள் திருமதி லட்சுமி நாராயணன்,பை மெட்டல் பேரிங்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சிவசைலம் நாராயணன் ஆகியோர் மாநாட்டை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்..
மாநாட்டில் முக்கிய விருந்தினராக ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள டாய் சி ஹெல்த் இன்ஸ்டியூட் இயக்குனர் டாக்டர் பால் லாம் கலந்து கொண்டு பேசினார்..
டாய் சி கலையில் தமது அனுபங்களை பகிர்ந்து கொண்ட அவர், உடல் ஆரோக்கியம் மேம்படவும்,உடல் நலன் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வாகவும்,,மற்றும் மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபட டாய் சி எவ்வாறு மனித வாழ்வில் இணைந்துள்ளதை குறிப்பிட்டார்..
குறிப்பாக மனித வாழ்க்கையில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது அனைத்து நிலைகளிலும் முக்கிய பங்கு வகிப்பதாக கூறிய அவர், அதனை அதிகரிக்க டாய் சி கலை உதவுவதாக அவர் கூறினார்…
மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் நித்திய குருகுலா நிர்வாகிகள் பிரசாந்த் சந்தி்ரன்,நடாஷா சந்திரன்,சுதா சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…