தரங்கம்பாடி பேரூராட்சியில் ரூ 1.50 கோடியில் கட்டப்பட்டு ஓராண்டு கடந்தும் திறக்கப்படாத மின்சார பொது தகன கூடம். பழுதடைந்த சாலையை கடந்து பழைய எரியூட்டு மயானத்தை பயன்டுத்தும் அவலம்.புதிய சாலை அமைத்து மின்தகன கூடத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் 16 வார்டுகள் அமைந்துள்ளது. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்ட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் பயன்பாட்டிற்கு அந்தந்த பகுதியில் மயானங்கள் அமைந்திருந்தாலும் அவை பராமரிப்பின்றி சிதிலமடைந்தும் சாலை மற்றும் மின்சார வசதியின்றியும் உள்ளது.எனவே நவீன வசதிகளுடன் அனைத்து சமூகத்தினருக்குமான பொது மின்சார தகனகூடம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலக சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரூபாய் 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்சார பொது தகனக்கூடம் கட்டுமான பணிகள் துவங்கியது. அனைத்து கட்டுமான பணிகளும் முடிந்து மின்சார தகன கூடம் கடந்த ஒராண்டுக்கு மேலாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பயனற்று பூட்டியே கிடக்கிறது. தகன கூடம் திறக்கபடாத நிலையில் கடந்த ஆண்டு மழையின் போது புகைபோக்கி துருபிடித்து பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனை சீரமைத்து மீண்டும் பொருத்தினரே தவிர தற்போது வரை தகன கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பழுதடைந்த ஜல்லிகற்கள் குவிந்த சாலையின் வழியே அச்சத்துடன் இறந்தவர் சடலத்தை கொண்டு சென்று சிதிலமடைந்த பழைய மயானத்திலேயே எரியூட்டி வருகின்றனர்.
சில மயானத்தில் செல்போன் வெளிச்சத்தில் அஅடக்கம் செய்யும் அவல நிலையும் உள்ளது.எனவே தரங்கம்பாடி பேரூராட்சி மின்சார பொது தகன கூடத்திற்கு புதிய சாலை அமைத்து மின் தகன கூடத்தை உடனே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.