கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே பயணிகளின் நீண்ட ஆண்டுகள் கோரிக்கைகளை ஏற்று கும்பகோணத்திலிருந்து வளையவட்டம் வழியாக திருலோகி வரை புதிதாக துவங்கப்பட்ட அரசு போக்குவரத்து சேவை துவக்கம்….
அரசு தலைமை கொறடா கோவி. செழியன் சேவையை துவக்கி வைத்து சிறிது தூரம் புதிய வழிநடத்தில் பேருந்தில் பயணம் செய்து பயணிகளை உற்சாகப்படுத்தினர்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பருத்திக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட புழுதிக்குடி, வளையவட்டம் திருக்கழித்தட்டை, படைத்தலைவன்குடி, கோவில்பத்து கிராம மக்களின் நீண்ட ஆண்டுகள் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசின் சார்பில் கும்பகோணத்தில் இருந்து வளையவட்டம் வழியாக திருலோகி பேருந்து நிலையம் வரை செல்லும் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது.
சுமார் 26 கிலோ மீட்டர் தூரத்தில் பயணம் செய்யக்கூடிய போக்குவரத்து பேருந்து சேவையை கல்யாணபுரம் கடைவீதியில் இருந்து அரசு தலைமை கொறடா கோவி.செழியன் கலந்து கொண்டு கொடி அசைத்து, ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து புதிய பேருந்தில் வழிதடத்தில் அனைவரும் சிறிது தூரம் பயணம் செய்து பயணிகளை உற்சாகப்படுத்தினர்.
மேலும் இந்த பேருந்து பயணிகளின் வசதிக்காக கும்பகோணத்திலிருந்து வளையவட்டம் வழியாக திருலோகி வரை மூன்று முறையும் எதிர் மார்க்கத்தில் இருந்து மூன்று முறையும் தினசரி ஆறுமுறை பேருந்து இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் திருப்பனந்தாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் அண்ணாநம்பி , கும்பகோணம் அரசு போக்குவரத்து கிளை அதிகாரிகள், திமுகவின் நிர்வாகிகள் ,சமூக ஆர்வலர்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்