விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் கிராமத்தில் வரலாற்று.பிரசித்தி பெற்ற அருள்மிகு நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக.உள்ள நிலங்களை தேவதானம் அம்மையப்பா கூட்டுறவு குத்தகைதாரர் விவசாய சங்கத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது இந்த சங்கத்திற்கு பூங்கொடி கணேச மூர்த்தி என்பவர் தலைவராக இருந்து ஏராளமான குத்தகைதாரர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்
இந்த கூட்டுறவு சங்கத்தில் இருந்து 103 ஏக்கர் வரை இந்து சமய அறநிலைத்துறையில் இருந்து குத்தகைக்கு எடுத்து எந்த ஒரு குத்தகை பணமும்.முறையாக கட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலைத்துறை மூலம் முறையீடு செய்யப்பட்டது
பலமுறை இந்த சங்கத்திடம் விவசாய குத்தகை நிலத்தை கட்ட கோரி மனு செய்தும் கட்டப்படவில்லை அதற்கு பதிலாக தொடர்ச்சியாக நெல் விவசாயம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில் அம்மையப்பா கூட்டுறவு சங்கத்தில் குத்தகைக்கு விடப்பட்டுள்ள 103 ஏக்கர் நிலத்தையும் உடனடியாக அதை சுவாதீனம் செய்யுமாறு மதுரை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையருக்கு வருவாய் நீதிமன்றம் உத்தரவிட்டது
அதன் அடிப்படையில்.உடனடியாக 103 ஏக்கர் நிலத்தையும்.சுவாதீனம் செய்யுமாறு விருதுநகரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு தகவல் அனுப்பப்பட்டு அதன் மூலம் குத்தகையை ரத்து செய்ய உத்தரவிட்டார்
விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் வளர்மதி தலைமையில் ஆலய நிலங்கள் குத்தகை வட்டாட்சியர்
க. மாரிமுத்து, கோவிலின் பரம்பரை அறங்காவலர் துரை ரத்தினகுமார் உள்பட 50க்கும் மேற்பட்ட இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் தேவதானம் விரைந்தனர். அங்கு சென்று 103 ஏக்கர் குத்தகை நிலத்தில் 101 ஏக்கர் நெல் விவசாயத்திலும், இரண்டரை ஏக்கர் நெல் களமாகவும் இருந்ததை கண்டு அனைத்தையும் சுவாதீனம் செய்து இந்து சமய அறநிலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 3- கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுவாதீனம் செய்யப்பட்ட நிலங்களில் பாதி நிலம் தரிசாகவும் பல நிலங்களில் நெல் நாற்றுப் பாவியும் பல நிலங்களில் நெல் நடவு செய்து 40 நாட்கள் ஆகியும் இருப்பதை கண்டறியப்பட்டது
அந்தப் பகுதியில் யாரும் உள்ளே நுழையக்கூடாது என இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அறிவிப்பு பலகை ஊன்றப்பட்டது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட ஆலய நிலங்கள் குத்தகை வட்டாட்சியராக க.மாரிமுத்து பொறுப்பேற்றதிலிருந்து வத்திராயிருப்பு பகுதியிலும் தேவதானம் பகுதியிலும் கோடிக்கணக்கான மதிப்புள்ள கோவில் நிலங்கள் சுவாதீனம் செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.