தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 10-அரசு அலுவலகங்கள் முன்பு திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
தாராபுரம் வட்டக்கிளை, தலைவர் செந்தில் குமார் தலைமையில் செயலாளர் தில்லையப்பன் முன்னிலையில் அரசு அலுவலகங்கள் முன்பு முதல்வர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும்.சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள். ஊர்புற நூலகர்கள் எம்.ஆர்.பி செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம். தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை இலட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும். ஓய்வூதியமும் வழங்கிட வேண்டும்.சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். உள்ளிட்ட.கோரிக்கைகளை வலியுறத்தி திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தமிழக முதல்வரின் கவனம் ஈர்த்திடும் வகையில் வட்டாட்சியர் அலுவலகம் நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை அரசு மருத்துவமனை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதே போல குண்டடம் மூலனூர் கோவிந்தாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு மாவட்டம்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தாராபுரம் செய்தியாளர் பிரபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *