கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்ட அளவிலான முதல்வர் கபாடி கோப்பை தஞ்சாவூர் காவல்துறை அணியினர் முதலிடம்
தஞ்சாவூர் மாவட்ட அளவிலான முதல்வர் கபாடி கோப்பை போட்டியில் பங்கேற்ற தஞ்சாவூர் மாவட்ட காவல் நிலைய அணியினர் முதலிடம் பெற்றனர்.
மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை காண கபாடி போட்டி தஞ்சாவூர் சத்யா விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் தீயணைப்புத்துறை தஞ்சாவூர் காவல்துறை, மின்சாரத்துறை, மருத்துவம், உடற்கல்வி ஆகிய துறைகளைச்சேர்ந்த எட்டு அணியினர் பங்கேற்றனர். இதில் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை அணியினருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை நாச்சியார் கோவில் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் ஆ. அருண்குமார் தலைமையிலான தஞ்சை மாவட்ட அணியினர் முதலிடம் பெற்றனர்.
முதலிடம் பெற்ற அணியினருக்கு கோப்பை ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. சிறப்பாக விளையாடி முதலிடம் பெற்றமைக்கு தஞ்சை மாவட்ட காவல் துறையினர்கள் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்