தேனி வடக்கு மாவட்டம் இந்து முன்னணி சார்பாக அதன்
நிறுவனத்தலைவர் இராம. கோபாலனின் 98 வது பிறந்தநாள் தின விழாவை முன்னிட்டு நகரின் இதய பகுதியான தேனி நேரு சிலை அருகில் அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்டத் தலைவர் முருகன் தலைமையில் மாவட்ட செயலாளர் உமையாராஜன் மாவட்டத் துணைத் தலைவர் திலகராஜ் தேனி நகரத் தலைவர் மணிகண்டன் மற்றும் நகர் ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தி அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் இந்து முன்னணியின் கொள்கையான சிறுபான்மை இன மக்களான முஸ்லிம் கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு தரிசனம் என்பதே கிடையாது அங்கு கோடீஸ்வரரும் அன்றாட காட்சியும் ஏழை எளியவர்கள் ஒரே இடத்தில் இருந்து கடவுளை வணங்குகிறார்கள் ஆனால் நமது இந்து கோவிலில் கட்டண தரிசனம் விஐபி தரிசனம் என்று கட்டணங்கள் வசூல் செய்தும் பணம் கொடுப்பவர்களுக்கு சாமி இருக்கும் கருவறை அருகே நிற்க வைத்து சாமிக்கு போட்ட மாலையை எடுத்து அவருக்கு போட்டு அவரை தெய்வமாக வணங்கும் பூசாரிகளால் ஏழை எளிய மக்கள் பொது தரிசனத்தில் கட்டணம் இல்லாமல் தரிசிக்கும் போது அவர்களை வேகமாக கையைப் பிடித்து இழுத்து தரிசித்தது போதும் வெளியே போ என்று கூறும் அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து நமது நிறுவனத் தலைவர் இராமகோபாலன் கோவில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தியது குறித்து பொதுமக்களுக்கு புரியுமாறு விளக்கி பேசினார்கள் மேலும் கடவுளுக்கு முன் தெய்வங்களை வணங்க வரும் அனைவரும் ஒன்றே எனவே கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர் பிறந்த நாளில் நாங்கள் இந்து அறநிலைத்துறை அதிகாரிகளுக்கும் ஆளும் திமுக அரசுக்கும் கோரிக்கை வைக்கிறோம் இவ்வாறு பிறந்தநாள் கூட்டத்தில் வலியுறுத்தி பேசினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *