கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அகரம் பகுதியில் அகரம் கூட்ரோடு சாலையில் பள்ளி வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்த கடைகளை அகற்றி இடையூறு இல்லாத வண்ணம் ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றன
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான சுமார் 5க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளது இந்த மரங்கள் ரோட்டில் அருகாமையில் உள்ளது எனவே இதனால் பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்
அதனை ஒட்டி உள்ள கடை மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்த கடைகள் மற்றும் சிறு நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர்
இவர்களது ஆக்கிரமிப்பால் தொடர்ந்து பல விபத்துக்கள் ஏற்படுத்தியது இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படையும் சூழல் உள்ளது எனவே சாலை ஓரத்தில் உள்ள கடைகள் மற்றும் மரங்களை ஆய்வு செய்து மக்களுக்கு இடையூறு இருக்கும் கடையில் மற்றும் மரங்களால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் பெரிதும் அவதி பெற்று வரும் நிலையில் இந்நிலையில் தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது
இந்நிலையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நெடுஞ்சாலைக்கு சொந்தமான மரங்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்றி போக்குவரத்து ஏற்படாத வண்ணம் சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்