திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்றைய தினம் செப்டம்பர் 20ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 100 மனுக்கள் பெறப்பட்டது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கூடுதல் உதவித் தொகை 1000 வழங்கும் திட்டத்தின்கீழ் 8 பயனாளிகளுக்கு ஆணையும் தமிழ்நாடு நலவாரிய கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 10 நபர்களுக்கு காசோலை மொத்த மதிப்பு 35,000 மாற்றுத்திறனாளி களுக்கு வீட்டு மனை பட்டா 10 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்
கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அமுதா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்