திருப்பதி லட்டுக்களை விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் கண்டனம் இந்தியாவில் மிகப் பிரசித்தி பெற்ற அனைத்து இந்தியர்களும் வணங்கும் ஒரே தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் இந்த கோவிலில் தரிசித்து விட்டு அங்கு திருமலை தேவஸ்தானம் பிரசாத ஸ்டாலில் லட்டு வாங்கி செல்வது பக்தர்களின் வழக்கம்.
ஆனால் அங்கு வழங்கப்படும் திருமலை தேவஸ்தான ஸ்டாலில் வழங்கப்படும் லட்டில் லட்டு சுவையாக இருப்பதற்காக மாட்டு கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு நெய்யில் கலப்படம் செய்யப்பட்டு லட்டு விற்பனை செய்வதை தேசிய செட்டியார்கள் பேரவை 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்
இந்த நடவடிக்கையை இந்துக்களின் புனிதன்மையை மாசு மற்றும் களங்கப்படுத்தும் விதமாக இருக்கின்றது எனவே இவ்வாறு நடந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்