தென்காசி மாவட்டம் கடையம் அடுத்த இரவணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மளிகை கடை ஊழியரான முகம்மது நஸீருதீன்-ஜலிலா தம்பதிகளின் மகள்களான குற்றாலம் செய்யது பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவி சாதனைச்சுடர் விருது பெற்ற ஷாஜிதா ஜைனப் 12 ஆம் வகுப்பு பயின்று நிறைவு செய்து இயற்கை மற்றும் யோகா இளங்கலை மருத்துவ பட்டப்படிப்பிற்கு விண்ணப்பம் செய்து இருக்கும் சிங்கப்பெண் விருது பெற்ற மாணவி மிஸ்பா நூருல் ஹபிபா இவ்விருவருக்கும் பயின்று வரும் பள்ளி குடும்ப ஏழ்மை சூழல் அறிந்து சாதனைகளை அங்கிகரிக்கும் வகையில் கல்வி பயில இலவசம் வழங்கி இருக்கின்ற நிலையில் இச்சகோதரிகள் யோகா, ரோலர் ஸ்கேட்டிங்கில் பல்வேறு சாதனைகள் செய்து சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தங்களை ஈடுபடுத்தி வருவதுடன் பல்வேறு சாதனை சான்றுகள் விருதுகள் பெற்று வருகின்றனர்.

இதில் மூத்த சகோதரி மிஸ்பா தாம் விண்ணப்பம் செய்து இருக்கின்ற பி.என்.ஒய்.எஸ் மேற்படிப்பிற்கு உதவுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் அவரை மரியாதை நிமிர்த்தமாக

தாம் தனது தங்கை பெற்று இருக்கும் சாதனை சான்றுதழ்களுடன் இரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது உசேன், துணைத் தலைவர் ராமலட்சுமி ஆகியோர் முன்னிலையில்
சந்தித்து ஆசிப் பெற்றனர்

பின்பு கோரிக்கை மனு வழங்கினார்கள்

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் தங்களது கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கடையம் சேவாலாயா ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பூதத்தான், பத்திரிக்கை ஆசிரியர் நாகராஜன், மாவட்ட செய்தியாளர் கோவிந்தராஜ்,யோகா, ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியர் குரு கண்ணன் மற்றும் யு.பி.எஸ்.சி பயின்று வரும் மாணவி ஜாஸ்மின் மீரா மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் மிஸ்பா தனது பி.என்.ஒய்.எஸ் படிப்பிற்கு வருகின்ற செப். 23 ஆம் தேதி சென்னை அரும்பாக்கத்திலுள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் நடைபெறும் கல்லூரி கலந்தாய்வு சிறப்பு நிலை பிரிவில் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *