தென்காசி மாவட்ட ஆட்சியர் தேதி அறிவிப்பு :-
தென்காசி மாவட்டம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 22 – 09 – 2024-
தேதியில் நடைப் பெறுகிறது.
என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்தார்.
அவரது செய்தி குறிப்பில் ;-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தென்காசி மாவட்டம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லுரி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள்.அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 10/09/2024 முதல் நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 23/09/2024 அன்று நடைபெறவிருந்ததையடுத்து பள்ளிகளில் தற்போது காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருவதால் 23/09/2024 ற்கு பதிலாக 22/09/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும். மேலும் இவ்விளையாட்டு போட்டிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். விளையாட்டு போட்டிகள் நடைபெறும் நாளன்று மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (ம) ஆதார் அட்டை ஆகியன சமர்பிக்க வேண்டும் மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலக அலைபேசி erod 7708330531 (அ) 7010797695 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். என தெரிவித்துள்ளார..