ரயில் பயணத்தின் போது ரயில் களில் காகித டம்ளர்கள், அலுமினிய சாயம் பூசப் பட்ட உணவு பெட்டிகள், கடின நெகிழி பெட்டிகள், நெகிழிபை போன்றவற்றை பயணிகள் அதிகம் பயன் படுத்துகின்றனர்.

பிறகு, அவற்றை ரயில் பாதை ஓரங்களில் வீசுகின்றனர். இதனால் கழிவு நீர் கால் வாய்கள் அடைபட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், இவை ரயில் பாதை அருகில் உள்ள சிக்னல் மற்றும் தொலை தொடர்பு உபகரணங்க ளில் சிக்கி அவற்றை பழுத டையச் செய்கிறது. இந்த குப்பைகளை அகற்றுவதில் ரயில்வே ஊழியர்களும், தூய்மை பணி யாளர்களும் கூடுதல் சிரமங்களை எதிர் கொள்கின்றனர், எனவே பயணிகள் ரயில் நிலையங்களில் உள்ள குப்பைத்தொட் டிகளை பயன்படுத்த வேண்டும். இதை மீறுபவர்களுக்கு கடும் அபரா தம் விதிக்கவும் ரயில்வே சட்டத்தில் வழிவகை உள் ளது. தற்போது மேற்கொள் ளப்பட்டு வரும் இரு வார தூய்மை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கடந்த இரு நாட்களாக மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கோவில்பட்டி, திருநெல் வேலி போன்ற பெரிய ரயில் நிலையங்களில் ரயில் பாதை பகுதிகளில் இருந்து பெருமளவில் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
இது போன்ற பணி களுக்கு அவசியம் ஏற்படாத வகையில், பயணிகள் அனைவரும் குப்பைத் தொட்டிகளை பயன்ப டுத்த முன்வர வேண்டும். இவ்வாறு மதுரை கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *