அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முப்பெரும் விழா அங்கு அமைந்துள்ள ஸ்ரீ முனியாண்டி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சிந்தனைவளவன், தலைமையில் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வஅரசு, கரிகாலன், காமராஜ், மணிமொழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
மாநில அமைப்புச் செயலாளர் எல்லாளன், மாநில நிர்வாகிகள் பாண்டியம்மாள், கலைவாணன், ரேவதி, அழகர்சாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா மற்றும் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் கட்சியின் அங்கீகார தினத்தை முன்னிட்டு முப்பெரும் விழாவாக நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் ஏழை எளிய பொது மக்களுக்கு உணவு மற்றும் வேஷ்டி, சேலை, மரக்கன்றுகளும் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு, நோட்டு புத்தகம் எழுது பொருள்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தமிழழகன், பாலமுருகன் மணி, சிவராமகிருஷ்ணன், தங்கராஜ், உள்ளிட்ட மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்..