எடமலைப்பட்டி புதூர் பகுதியில் ரகுராம் என்பவரது வீட்டில் உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சத்துணவு அமைப்பாளரான ரகுராம் மனைவி சத்துணவு முட்டைகளை வீட்டில் வைத்து அதன் மீது உள்ள அரசு முத்திரைகளை அழித்துவிட்டு முட்டைகளை எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஆயிஷா ஹோட்டலுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
முட்டைகளில் பாதி சீல் இருந்தும் அவற்றை அழித்தும், அழிக்க முடியாமலும் வைத்திருந்தனர். பள்ளிகளுக்கு அரசு சத்துணவு முட்டைகளை கொடுத்து வரும் நிலையில் விற்பனைக்காக முட்டையில் உள்ள சீல்களை அழித்து ஒரு கும்பல் இது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.
இதனையடுத்து சத்துணவு முட்டைகளை திருடி விற்பனை செய்தது தொடர்பாக, எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலையத்தில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.
அதேநேரம் சத்துணவு முட்டைகளை தங்களது ஹோட்டலில் விற்பனை செய்தது தொடர்பாக, ஆயிஷா ஹோட்டலுக்கும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல்வைத்தனர்.