கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே சாலையில் கிடந்த தங்க சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த போலீஸார் ….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே
ஒப்பிலியப்பன் கோயில் சாலையில் கிடந்த தங்க சங்கிலியை உரியவரிடம் போலீஸார் ஒப்படைத்ததால் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
விருத்தாச்சலம் மணலூர் தமிழ் நகரைச் சேர்ந்தவர் கண்ணையன் மகன் சண்முக பிரியன் (30) தனியார் நிறுவன ஊழியராக உள்ளார். இவர் தனது குடும்பத்தாருடன் நேர்ச்சைக்காக உப்பிலியப்பன் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தார். திரும்ப செல்ல காரில் ஏறும்போது 2 பவுன் தங்க கை செயின் தவறி விழுந்தது. இதை கவனிக்காமல் சென்றனர். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த திருநீலக்குடி சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜராஜ சோழன் கைசெயினை கைப்பற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அப்போது தங்க கை செயினை காணவில்லை என்று சண்முகபிரியன் காவல் நிலையத்திற்கு வந்தார். அவரிடம் விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து திரும்ப ஒப்படைத்தனர். இதற்கு சண்முகபிரியன் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.