கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ..
மாநகர துணை மேயர் பங்கேற்பு….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 16 ஆவது வட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் தனியார் மண்டபத்தில் கும்பகோணம் மாநகர 1 ஆவது பகுதி 16 ஆவது வட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழச்சியில் மாநகர திமுக செயலரும், துணை மேயருமான சு.ப.தமிழழகன் கலந்து கொண்டு கட்சி நடவடிக்கைகள் பற்றி பேசினார்.
கூட்டத்தில் மாநகர அவைத்தலைவர் வாசுதேவன், துணை செயலர் பிரியம் சசிதரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் குட்டி கிருஷ்ணமூர்த்தி, 1 ஆவது பகுதி செயலர் ரா.செல்வராஜ் உள்ளிட்டோர் பேசினர். ஏற்பாடுகளை செயலர் கே. குமார், மாமன்ற உறுப்பினர் ஆர்.பாலாஜி மற்றும் திமுகவினர் செய்தனர்.