தூத்துக்குடி மாநகரில் உள்ள 60 வார்டுகளிலும் சாலை ஓரங்களில் மாநகரை பசுமை மாநகரமாக மாற்றும் விதமாக 23 வகையான மரக்கன்றுகளை மாநகர் முழுவதும் நடப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் அறிவித்திருந்தார்

அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆலோசனையில் மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகராட்சி ஆணைய ர்மதுபாலன் பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி மரக்கன்றுகளை நடுவது என்று முடிவு செய்யப்பட்டது

அதன் அடிப்படையில் மாநகராட்சியில் உள்ள 15 வது வார்டு இபி காலணியில் இன்று மேயர் ஜெகன் தலைமையின் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி 20,000 மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் கலெக்டர் இளம்பகவத் ஆணையர் மதுபாலன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் மதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

தூத்துக்குடி மாநகர முற்றிலும் பசுமை மாநகரமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் அதற்கான பணிகளை இன்று துவக்கப்பட்டு சாலை ஓரங்களில் வருகின்ற 30ஆம் தேதிக்குள் 20 ஆயிரம் மரக்கன்றுகளையும் அறுபது வார்டுகளிலும் மரக்கன்றுகளை முழுவதும் நடப்படும் என்று கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *