திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஏரி வேலூர் ஊராட்சியில், உதவி பெறும் துவக்க பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ ஆணைப்படி,திருவாரூர் மாவட்ட சுகாதார அலுவலர் ஹேமசந்த் காந்தி வழிகாட்டுதல் படி, ஆலங்குடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமை வைத்தார்.ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நடராஜன் மற்றும் வீரபாண்டியன் முன்னிலை வகித்தனர்,
வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய குழு உறுப்பினரும் ஆகிய வீ.அன்பரசன் குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் ஆலங்குடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமில் பொது மருத்துவம் மற்றும் பெண்களுக்கான மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், கண் மருத்துவம், சித்த மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் ஆய்வக பரிசோதனைகள், மற்றும் நம்பிக்கை மையம் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இயன் முறை மருத்துவம்,இசிஜி மற்றும் வயா வெளி மற்றும் சிறப்பு நோய்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. காசநோய் தொடர்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டது.முகாமில் வார்டு உறுப்பினர் ஜோதிராமன்,சுகாதார ஆய்வாளர் கோபு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர், அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் பத்மினி, சமுதாய சுகாதார செவிலியர் வசந்தி மற்றும் பகுதி நேர செவிலியர், பல் மருத்துவர், சித்த மருத்துவர், கண் மருத்துவ பரிசோதனையாளர், ஆய்வக பரிசோதனையாளர், ஆலோசனை வழங்குபவர் மற்றும் அனைத்து நிலை பணியாளர்களும், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவில் ஊராட்சி மன்ற செயலாளர் ராஜமாணிக்கம் அனைவருக்கும் நன்றி கூறினார்.