தேனியில் நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்10 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தேனி மேலப் பேட்டை இந்து நாடார்கள் கோவில் முறையின் தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி குழுமத்தின் நிர்வாகியு மான கல்வித்தந்தை ராஜமோகன் தலைமை வகித்தார்
உப தலைவர் கணேஷ் பொதுச்செயலாளர் ஆனந்தவேல் பொருளாளர் பழனியப்பன் கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார் மகேஸ்வரன் இணைச் செயலாளர் நவீன் ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரியின் முதல்வர் முனைவர் டாக்டர் மதளைசுந்தரம் அனைவரையும் வரவேற்று ஆற்றிய உரையில் கடந்த ஆண்டின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் பற்றி எடுத்துரைத்து பட்டதாரி மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்
இவ்விழாவில் தேசிய கடல்சார் ஆய்வு முன்னாள் விஞ்ஞானி மற்றும் சென்னை இண்
டோமர் கோஸ்டல் ஹைட்ராலிக் ஸ் நிர்வாக இயக்குனருமான டாக்டர் பொன்னம்பலம் சந்திரமோகன் சிறப்பு விருந்தினராபங்கற்று பொறியியல் பட்டதாரிகள் மத்திய அரசின் திட்டங்களை பயன்படுத்தி சிறந்த தொழில் முனைவராக உருவாக வேண்டும் அறிவை மூலதனமாக கொண்டு சரியான முறையில் திட்டமிட்டு கடின உழைப்புடன் செயல்பட்டால் பணி புரியும் இடங்களில் தங்கள் துறை சார்ந்த பணிகளில் சிறந்து விளங்கி வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம். மேலும் பொறியியல் பட்டதாரிகள் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு தகுந்தவாறு தங்களை தயார் படுத்தி கொண்டு பொருளாதார சவால்களை எதிர்கொண்டு சமுதாய வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் தற்போது மாறிவரும் டிஜிட்டல் உலகத்தில் இந்தியா சமுதாய கலாச்சாரத்தை பாதுகாத்து தொழிற்பு அறிவை பெற்று நாட்டின் முன்னேற்றத்திற்கு துணை புரிய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார் இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 142 இளநிலை மற்றும் முதுகலை பொறியியல் மாணவ மாணவிகளுக்கு பட்டய சான்றிதழ் வழங்கி னார்
இந்த நிகழ்ச்சியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறையின் அனைத்து கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள் இணைச் செயலாளர்கள் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் முதல்வர்கள் துணை முதல்வர்கள் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்