திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ரகுநாதபுரம் ஊராட்சி அனியமங்கலம் காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் குரு என்ற குருமூர்த்தி (வயது 42).இவர் கடந்த சில ஆண்டுகளாக வலங்கைமான் துணை மின் நிலையத்தில் தற்காலிக ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் ரெகுநாதபுரம் ஊராட்சி அணியமங்கலம் பகுதியில் மின்மாற்றி யில் ஏற்பட்ட மின் பழுதினை சரி செய்வதற்காக நேற்று காலை மின்மாற்றியில் ஏறினார்.அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் குருமூர்த்தி சம்பவ இடத்திலே பலியானார். தகவல் அறிந்த வலங்கைமான் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ரவி தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து குருமூர்த்தி உடலை மீட்டனர்.பின்னர் வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி குருமூர்த்தி உடனே கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச் சம்பவம் குறித்து திருவாரூர் மாவட்ட சி ஐ டி யு செயலாளர் டி. முருகையன் திருவாரூர் மாவட்ட ஆட்சி தலைவருக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது :-
.திருவாரூர் கோட்டம் வலங்கைமான் மின் பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் குருமூர்த்தி நேற்று (22/9 24) காலை அணியமங்கலம் என்ற இடத்தில் உயர் அழுத்த மின் பாதையில் ஐம்பர் கட் சரி செய்யும் போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆக்க முகவர் ABS ஐ திறந்து விட்டு பணி செய்ய அனுப்பியுள்ளார். ஆனால் ABS ல் ஒரு, ஜம்பர் டைரக்ட் செய்யப்பட்டிருந்தது. ABS அருகிலேயே முகவர் இருந்துள்ளார். பிரதான மின் பாதையில் உள்ள ABS ல் ஒரு ஜம்பர் டைரக்டாக உள்ளதை உடனடியாக சரி செய்யாமல் இருந்ததும், மேற்பார்வை செய்தவர்களின் அலட்சியமுமே,இந்த விபத்துக்கு காரணம். இதற்கு காரணமான சம்பந்தப்பட்ட ஏஇ, முகவர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்த குருமூர்த்தி குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.