பெரம்பலூரில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை சுருக்கி இயற்றிய ஒன்றிய அரசை கண்டித்தும் ,காஞ்சிபுரம் மாவட்டம் சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகவும் சங்கம் வைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமையை பாதுகாக்க கோரி மின் ஊழியர்கள் / மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். அகஸ்டின் தலைமையில் நடைபெற்றது மாவட்ட கவுன்சில் செயலாளர் ரெங்கசாமி, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பன்னீர்செல்வம், கருணாநிதி கண்டன உரை நிகழ்த்தினார்கள். கோட்ட செயற்குழு உறுப்பினர்கள் சதீஷ், செந்தில், தினேஷ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்கள் . கலையரசன், இளையபெருமாள், , பெஞ்சமின் அப்பாஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.