மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் மதுரையில் இருந்து கலந்து கொண்ட நீச்சல் வீரர்கள் மொத்தம் 21 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். திரிவேணி பள்ளி மாணவன் சஞ்சீவன் 50 மீ,100 மீ ப்ரிஸ்டையில் தங்கம்,50 மீ,100மீ பட்டர்பிளே தங்கம்,200 மீ ஐ.எம் ,4×50 மீ ப்ரி ஸ்டையில் ரிலே,4×50மீ மிட்லே ரிலே தங்கம் என எழு பதக்கங்களுடன் தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜீவனா பள்ளி மாணவன் முகமது இக்பால் 50 மீ,100 மீ பிரஸ்டோர்க் தங்கம்,200 மீ ஐ.எம்,100 மீ ப்ரிஸ்டையில் வெண்கலம்,4× 50 மீ ப்ரிஸ்டையில் ரிலே,மிட்லே ரிலே தங்கம் என ஆறு பதக்கங்களும்,அதே பள்ளியை சார்ந்த முகமது இர்பன் 50 மீ , ப்ரஸ்டோர்க் வெள்ளி,25 மீ ப்ரஸ்டோர்க் வெண்கலம் என இரு பதக்கங்களும்,
குயின் மேரி பள்ளி மாணவன் ஸ்ரீவிஷ்னு 100 மீ பேக் ஸ்டோர்க் வெள்ளி,50மீ பேக் ஸ்டோர்க் வெண்கலம்,4×50 மீ ப்ரிஸ்டையில் ரிலே,மிட்லே ரிலே தங்கம் என நான்கு பதக்கங்களும் ,லெட்சுமி பள்ளி மாணவன் ரிஷிவர்ஷன் 4×50 மீ ப்ரிஸ்டையில் ரிலே ,மிட்லே ரிலே தங்கம் என இரு பதக்கங்களும் வென்றனர்.
வெற்றி பெற்ற நீச்சல் வீரர்களை மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, தமிழ்நாடு நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், இணைச் செயலாளர் கண்ணன், பயிற்சியாளர் விஜயகுமார் ஆகியோர் பாராட்டினர்.