தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், செப்- 25. தஞ்சாவூரில் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி சார்பிலான மதுவுக்கு எதிராக பரப்புரை இந்திய நாடு முழுவதும் செப் 1 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி பாத்திமா ஜான், தஞ்சாவூர் பெண்கள் வட்ட ஒருங்கிணைப்பாளர் ஆலிமா சலீமா பேகம் ஆகியோர் இணைந்து ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரை யின் லோகோவை வெளியிட்டனர்.
பின்னர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் இந்தியாவில் பள்ளி மாணவர்கள் துவங்கி ஆண், பெண் வேறுபாடின்றி மது அருந்தி வருகின்றனர். விபத்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு என அனைத்து தீமைகளுக்கும் மதுபோதை அடித்தளமாக உள்ளது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி போதைக்கு எதிரான நாளாக தமிழக முதல்வர் முன்னெடுத்ததை வரவேற்கிறோம். மதுவை தடை செய்யாமல் போதையில்லா பாதை சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து பூரண மதுவிலக்கை கொண்டுவர வேண்டும்.
இந்தியாவில் தினமும் 90 பாலியல் வன்புணர்வு நடப்பதாகவும், ஆண்டுக்கு 32 ஆயிரம் பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாவதாகவும் ஒன்றிய அரசின் தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் ஒழுக்கம் என்பதற்குள் அனைத்தும் அடங்கி விடும் என்பதால் ஒழுக்கமே சுதந்திரம் என்ற பரப்புரையை இந்தியா முழுவதும் செப்டம்பர்-1 முதல் செப்டம்பர்-30ம் தேதி வரை மேற்கொள்ள உள்ளோம். அனைத்து மாநிலங்களில் மாவட்டங்கள் வாரியாக ஒவ்வொரு ஒருங்கிணைப்பாளர்களை கொண்டு மதம் சாராது அனைவரும் கைகோர்த்து 30 நாட்களில் 2 கோடி பேரை நேரடியாக சந்தித்து மது ஒழிப்பு பரப்புரை செய்யவுள்ளோம்.
இதன் ஒரு பகுதியாக வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி தஞ்சாவூர் கீழவாசல் பேரறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் ஐமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பில் நடைபெறும் பல் சமய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாநகர மேயர் சண். ராமநாதன் அவர்கள், மாநகர செயலாளர், இ.யூ.மு.லீக் மா.செயலாளர் ஜெய்னுலாப்தீன், தஞ்சை மாவட்ட திருவருட் பேரவை செயலாளர் வ.தியாகராஜன், மக்கா மஸ்ஜித் டிரஸ்டி ஜாஹீர் உசேன், த.சி.நலக்குழு மா.ந.தலைவர் அப்துல் நசீர், இறைப்பணி திருக்கூட்டம் ஜோதிமலை திருவடிக்குடில் சுவாமிகள், தஞ்சை மறைமாவட்டம் பல் சமய உரையாடல் பணிக்குழு அருட்தந்தை, A. விக்டர்தாஸ், சமரசம் இதழ் பொறுப்பாசிரியர் முகமது அமீன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என்று கூறினார்.